உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மசினகுடியில் மழை; வனத்துறையினர் நிம்மதி

மசினகுடியில் மழை; வனத்துறையினர் நிம்மதி

கூடலுார்; முதுமலை மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில், பெய்த கோடை மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.முதுமலை, மசினகுடி, கூடலுார் பகுதிகளில் நடப்பாண்டு துவக்கம் முதல், கோடை மழை ஏமாற்றி வருகிறது. இதனால், வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வறட்சியான பகுதிகளில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் வாகனங்களில், தண்ணீர் எடுத்து சென்று, சிமென்ட் தொட்டிகளில் சுழற்சி முறையில் ஊற்றினர். உணவு கிடைக்காமல் வளர்ப்பு நாட்டு மாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக, கோடை மலையை எதிர்பார்த்து வனத்துறையினர் காத்திருந்தனர். மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரு நாட்கள் மழை பெய்தது. அதே போன்று முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது. வனத்துறையினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'நடப்பாண்டு கோடை மழை பெய்யாத தால் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது பெய்த மழையினால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. கோடை மழை தொடரும் பட்சத்தில், வறட்சியின் தாக்கம் குறையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை