உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டங்களில் மழைநீர் சேமிப்பு; கூடலுார் விவசாயிகள் ஆர்வம்

தோட்டங்களில் மழைநீர் சேமிப்பு; கூடலுார் விவசாயிகள் ஆர்வம்

கூடலூர்: கூடலூரில், மழைநீர் வீணாவதை தடுக்க சிறு விவசாயிகள், தேயிலை தோட்டங்களில் கால்வாய் அமைத்து மழைநீரை சேமித்து வருகின்றனர்.கூடலூர், பந்தலூர் பகுதி களில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. மழைநீரை சேமித்து பயன்படுத்த எந்த வசதியும் இல்லாததால் வீணாக வெளியேறியது. கூடலுாரில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளும் சிறு விவசாயிகள் பலர் தங்களது தோட்டங்களில் மழைநீரை சேமித்து வைக்க திட்டமிட்டனர்.இதற்காக, தேயிலை செடிகளுக்கு இடையே, குறிப்பிட்ட இடைவெளி விட்டு 10 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் குறிப்பிட்ட ஆழத்தில் கால்வாய் அமைத்து, அதில் மழை நீரை சேமித்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'மழைக்காலங்களில், மழைநீர் வீணாகி வருவதுடன், தேயிலை தோட்டங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. தோட்டங்களில் கால்வாய் அமைத்து மழைநீர் சேமிப்பதால் இதை தடுக்க முடிகிறது. அரசு மானிய உதவிகள் வழங்கி, விவசாயிகளிடம் திட்டத்தை ஊக்கப்படுத்தினால் நிலத்தடி நீர் உயரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ