உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் தேங்கும் மழைநீர்: மக்கள் அதிருப்தி

சாலையோரம் தேங்கும் மழைநீர்: மக்கள் அதிருப்தி

கூடலுார்- கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே, சாலையோரம் தேங்கும் மழைநீரால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் நகரில் மழைநீர் வழிந்தோடவும், மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக, கழிவுநீர் கால்வாயுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், பல இடங்களில் மழை நீர் வழிந்தோட முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.கூடலுாரில் சில நாட்களாக பலத்த மழை பெய்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே, மழைநீர் வழிந்தோட வழியின்றி சாலையோரம் தேங்கி நின்றது. அப்பகுதியை கடந்து செல்ல, சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இப்பகுதியில் அடிக்கடி இந்த பிரச்னை ஏற்படுகிறது.மக்கள் கூறுகையில், 'நகரில், மழை நீர் தேங்குவதை தடுக்க கழிவுநீர் கால்வாயியுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பலத்த மழையின் போது, மழைநீர் வழிந்தோட வசதி இன்றி சாலையோரம் தேங்குவதால், அதனைக் கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை