| ADDED : ஜூலை 19, 2024 02:44 AM
குன்னுார்;குன்னுார் பரசுராம் தெரு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு பரசுராம் தெரு. இப்பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் சாலையை இணைக்கும் பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு புதிதாக பாலம் கட்டப்பட்டது. தற்போது, மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த பாலத்தின் மீது மழைநீர் தேங்கி நிற்கிறது.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'சீரமைக்கப்பட்ட பரசுராம் தெரு பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பாலத்தின் வழியாக பள்ளி மாணவ, மாணவிகள் குழந்தைகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகளின் ஷூக்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால், குழந்தைகள் பள்ளியில் சிரமத்துடன் அமர்ந்து பயில்கின்றனர்ஏற்கனவே, இந்த பாலம் பணிகள் மந்தகதியில் நடந்து வந்த நிலையில், தற்போது மழை நீரும் தேங்கி நிற்பதால் பாலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மீண்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.