| ADDED : ஆக 18, 2024 01:26 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே, பாட்டவயல் பகுதியில் வன நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஓட்டலை வனத்துறையினர் அகற்றினர்.பந்தலுார் அருகே, பாட்ட வயல் சோதனை சாவடியை ஒட்டிய வனப்பகுதியில் சந்தோஷ் என்பவர், வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து ஓட்டல் கட்டி கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். இந்த இடம் வனப்பகுதி என்பதால் கட்டடத்தை அகற்ற வனத்துறையினர் அறிவுறுத்தி வந்துள்ளனர். கட்டடத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும். என, சென்னை ஐகோர்ட்டில் சந்தோஷ் வழக்கு தொடர்ந்தார்.ஆனால், வனநிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டியது தவறு என்றும், எனவே, ஆக்கிரமிப்பு கட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டும். என, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, நேற்று, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வன பாதுகாவலர் அரவிந்த் உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வனச்சரகர் ரவி தலைமையிலான குழுவினர், ஆக்கிரமிப்பு கடையை அகற்றினர். கடையில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர் சந்தோஷிடம் ஒப்படைக்கப்பட்டது.