உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்கா மைதானத்தில் சீரமைப்பு பணி; சுற்றுலா பயணியருக்கு தடை

பூங்கா மைதானத்தில் சீரமைப்பு பணி; சுற்றுலா பயணியருக்கு தடை

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசன் கடந்த, மே மாதம் முடிந்தது. செப்., மாதம் நடக்க உள்ள இரண்டாவது சீசனுக்கு பூங்காவில் விதைகள் சேகரிக்கப்பட்டு தொட்டிகளில் விதைக்கப்பட்டு மலர் நாற்றுக்கள் தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.தவிர, மலர் நடவு பணிகள், குளங்கள் உள்ளிட்டவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.மழையின் காரணமாக, பூங்காவில் உள்ள பிரதான புல் தரை மைதானத்தில் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதை தொடர்ந்து, புல் தரை மைதானம் மூடப்பட்டு புற்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ