உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோர முட்புதரால் விபத்து அபாயம்

சாலையோர முட்புதரால் விபத்து அபாயம்

குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், அகற்றப்படாத செடிகளால் வளைவுகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோடை சீசனையொட்டி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது.சாலையோரம் உள்ள முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், வளைவான பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மலைபாதையில் செல்லும் போது, பஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகன டிரைவர்கள், சிறிய வாகனங்களுக்கு இடம் கொடுப்பதை பின்பற்றாததால் புதர்கள் சூழ்ந்த இடங்களில் சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, முட்புதர்கள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ