உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையை சீரமைக்க வேண்டும்: ஆர்.டி.ஓ.,விடம் மனு

சாலையை சீரமைக்க வேண்டும்: ஆர்.டி.ஓ.,விடம் மனு

கூடலுார்;கூடலுார் அருகே சேதமடைந்துள்ள போஸ்பாரா - செம்பக்கொல்லி சாலையை, சீரமைக்க வலியுறுத்தி ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.கூடலுார் ஸ்ரீமதுரை போஸ்பாரா அருகே செம்பக்கொல்லி பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்துக்கு போஸ்பாரா பகுதியில் இருந்து, 3 கி.மீ., தூரம் மண்சாலை பிரிந்து செல்கிறது.வாகன வசதி இல்லாததால் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் நாள்தோறும் நடந்து வந்து, பஸ் அல்லது தனியார் வாகனங்களில் சென்று வருகின்றனர். இச்சாலை ஒட்டி முதுமலை வனப்பகுதி அமைந்துள்ளதால், யானைகள் நடமாடடுவதால் அச்சுத்துடன் மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.தற்போது, பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இப்பகுதி மண் சாலை சேறும் சகதியாக மாறி நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் நேற்று கூடலுார் வந்து, ஆர்.டி.ஓ., செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.ஆர்.டி.ஓ., கூறுகையில், 'சாலை ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சாலையை வருவாய்துறை, வனத்துறை, பழங்குடியின நலத்துறையினர் இணைந்து மீண்டும் ஆய்வு செய்யப்படும். இதற்காக, படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை