உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ.600க்கு ஊட்டி பூண்டு விற்பனை

ரூ.600க்கு ஊட்டி பூண்டு விற்பனை

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளை பூண்டுக்கு ருசி, மணம் இருப்பதால், தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் கிராக்கி அதிகம்.அறுவடைக்குப் பின், ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புவர்.ஊட்டி பூண்டு வரத்து அடியோடு குறைந்ததால், ஹிமாச்சல், காஷ்மீர், சீனா பகுதிகளிலிருந்து ஊட்டி மார்க்கெட்டுக்கு பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஊட்டி பூண்டு கிலோ 600 ரூபாய், பிற மாநில பூண்டு கிலோ, 350 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ