உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு

பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு

அன்னுார்:அன்னுாரில் இருந்து, 50 ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க, சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி ' டிட்டோ ஜாக்' சார்பில், 29ம் தேதி முதல் சென்னையில் டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது. முற்றுகை போராட்டத்தில் பங்கேற்கவும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அன்னுார் ஒன்றியத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 31ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் கூறுகையில், முற்றுகை போராட்டத்தில் பங்கேற்கும் 50 பேர், ஆதரவு தெரிவிக்கும் 150 பேர் என 200 பேர் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். அன்னுார் வட்டாரத்தில் இருந்து, 50 பேரும், கோவை மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்டோரும் போராட்டத்தில் பங்கேற்க சென்னை செல்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை