உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் பணிகள் ஜரூர்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் பணிகள் ஜரூர்

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக மலர் தொட்டிகள் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்கா சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். வார விடுமுறை உட்பட சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊட்டியில் சில நாட்களாக, மழை பெய்து வரும் நிலையில், தாவரவியல் பூங்கா புல்தரை பசுமைக்கு திரும்பி உள்ளது.வரும், செப்., முதல் நவ., வரை இரண்டாவது சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அதனை ஒட்டி பூங்காவை தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள, 15 மலர் தொட்டிகளில், 'பால்சம், பிளாக்ஸ், ஜின்னியா, பேன்சி, லுபின், சால்வியா, டேலியா, லில்லியம் மற்றும் அமராந்தஸ்' உட்பட, பல்வேறு மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், புல்தரைகளில் வளர்ந்துள்ள புற்களை அகற்றி சமன் படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.பூங்கா நிர்வாகிகள் கூறுகையில், 'இரண்டாம் சீசனுக்காக இங்கு நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளில், அடுத்த மாதம் இரண்டாம் வாரத்துக்குள் பூக்கள் மலர்ந்து விடும். செப்., மாதம் முதல் வாரத்தில் பூங்கா வண்ண மயமாகும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை