உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஸ்னுாக்கர் போட்டி: குன்னுார் மாணவர் பங்கேற்பு

ஸ்னுாக்கர் போட்டி: குன்னுார் மாணவர் பங்கேற்பு

குன்னுார் : பெங்களூருவில் நடக்கும் உலக பில்லியாட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டியில் குன்னுாரை சேர்ந்த மாணவர் பங்கேற்க உள்ளார்.குன்னுாரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஷாம் ஆல்வின்,16. ஸ்டேன்ஸ் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வரும் ஆல்வின், மாநில மற்றும் தேசிய அளவிலான பில்லியாட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். தேசிய அளவில் முதல், 8 இடங்களில் இடம் பிடித்தார்.இந்நிலையில், வரும், 24 முதல் 31ம் தேதி வரை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.பி.எஸ்.எப்., சார்பில் நடக்கும், 17 மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் நீலகிரியில் இருந்து ஷாம் ஆல்வின் பங்கேற்க உள்ளார். இதனையொட்டி, பயிற்சியாளரான தந்தை குமார்; ஷாம் ஆல்வின் ஆகியோர், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தற்போது, குன்னுார் கிளப்பில் ஷாம் ஆல்வின் தீவிர பயிற்சி பெற்று வருகிறார். தேசிய அளவிலான போட்டியில், 15 பேர் பங்கேற்கும் நிலையில், தமிழகத்தில் நீலகிரியில் ஷாம் ஆல்வின், கோவையில் ராகுல், சென்னையில் நவீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை