சமூக நீதி நாள் உறுதிமொழி..
குன்னுார்: பெரியார் பிறந்த நாளையொட்டி ஆண்டு தோறும் செப்., 17ம் தேதி சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, குன்னுார் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகள் குறித்து பேசப்பட்டது.