மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடு
4 hour(s) ago
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு
4 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
4 hour(s) ago
ஊட்டியில் 31 பேருக்கு ரூ.71.85 லட்சம் கடனுதவி
4 hour(s) ago
குன்னுார்:குன்னுாரில், வீடு தோறும் சென்று அலுமினிய பாத்திரங்கள் விற்கும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த வியாபாரியின் மகன், 10ம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்துள்ளார்.குன்னுார் எல்லநள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்; வரலட்சுமி தம்பதியின் மகன் ராகுல் கண்ணன். அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில், 474 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுதா மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர்.ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை வீடுகள் தோறும் சென்று அலுமினிய பாத்திரங்கள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார்.பள்ளி தலைமையாசிரியர் சுதா கூறுகையில்,''ராகுல் கண்ணன், 474 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சாதனை புரிந்துள்ளார் . ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவன் தேசிய திறனாய்வு தேர்வு, மாநில திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்று ஸ்காலர்ஷிப் பெற்று வருகிறார்,''என்றார்.ராகுல் கண்ணன் கூறுகையில், ''எனது வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்களும், எனது தாயும் அதிகம் ஊக்கமளித்தனர். 'பைலட்' ஆக வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம். மேலும், போட்டி தேர்வுகளையும் எழுத ஆர்வமாக உள்ளேன்,'' என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago