மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
சூலுார்;சுவாமி விவேகானந்தர் ஆன்மீகவாதி மட்டுமல்ல; நம் நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார், என, சொற்பொழிவாளர் ராஜா பேசினார். முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.கண் மருத்துவரும், சொற்பொழிவாளருமான ராஜா, சுவாமி விவேகானந்தரும், நவீன விஞ்ஞானமும் என்ற தலைப்பில் பேசியதாவது:சுவாமி விவேகானந்தர் ஒரு ஆன்மீகவாதியாகத்தான் நாம் அனைவரும் அறிந்திருப்போம். தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் மக்கள் உணர்ந்து பின்பற்றிட வேண்டி பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது சிகாகோ சொற்பொழிவு பிரசித்தி பெற்றது என்பன நமக்கு தெரிந்த விஷயங்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர் நம் நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தில் மிகப்பெரிய அக்கறை கொண்டிருந்தார் என்பது, நம்மில் பலரும் அறியாத தகவலாகும். ஆன்மீகத்தை பரப்ப எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டாரோ, அதே அளவுக்கு அறிவியல் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டார். ஒரு முறை சுவாமி விவேகானந்தர் கப்பலில் பயணம் சென்றபோது, அவருடன் ஜாம்ஜெட்பூர் டாடாவும் சென்றார். இருவரும் சந்திந்தபோது, எதற்காக வெளிநாடு செல்கிறீர்கள் எனக்கேட்டார். அதற்கு டாடா, அறிவியல் கண்காட்சிக்கு செல்வதாக கூறினார். நம் நாட்டில் கண்காட்சி நடப்பதில்லையா என, சுவாமி கேட்டார். அதற்கு டாடா,' நம் நாட்டில் அறிவியலாளர்களே கிடையாது. அப்புறம் எப்படி கண்காட்சி நடக்கும் என, கூறியுள்ளார். அதற்கு பதிலாக, நம் நாட்டில் இருந்த அனைத்து துறை வல்லுனர்களையும் அவர்களின் சாதனைகளையும் சுவாமி கூறினார். இதையடுத்து, உணர்ச்சி வசப்பட்ட டாடா அறிவியல் முன்னேற்றத்துக்கு பாடுபட உறுதி பூண்டார். சுவாமி வழிகாட்டுதல் படி, மைசூர் மகாராஜா குடும்பத்தினரை சந்தித்து, அறிவியல் மையம் அமைக்க நிலம் வழங்க கோரினார். அதன்படி, பெங்களூருவில், 400 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்குதான், 'ஐ.ஐ.எஸ் எனும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்' நிறுவனம் அமைக்கப்பட்டது. அதில் இருந்து உருவானதுதான் இன்று பல சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோ ஆகும். வெறும் ஆன்மீகத்தை மட்டும் வளர்க்காமல், அறிவியலையும் வளர்த்தவர் சுவாமி. நமது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் சுவாமி என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
03-Oct-2025