உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒரே வாரத்தில் ரூ.5.25 கோடி அதிகரிப்பு ஏறுமுகத்தில் தேயிலை ஏலம்

ஒரே வாரத்தில் ரூ.5.25 கோடி அதிகரிப்பு ஏறுமுகத்தில் தேயிலை ஏலம்

குன்னுார்;நீலகிரியில் தேயிலை ஏலத்தில் வரத்து; விற்பனை ஏற்றம் கண்டு ஒரே வார்த்தில், 5.25 கோடி ரூபாய் வரை மொத்த வருமானம் அதிகரித்தது.குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 24வது ஏலத்தில், '9.47 லட்சம் கிலோ இலை ரகம்; 3.51 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 12. 98 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. '8.60 லட்சம் கிலோ இலை ரகம், 3.16 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 11.76 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனையானது. 14.89 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில், 3.20 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. 2.59 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது. ஒரே வாரத்தில், 5.25 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது. கிலோவுக்கு, 114.73 ரூபாயாக இருந்தது. 90.66 சதவீதம் தேயிலை தூள் விற்றது. டீசர்வ் ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு ரூ.105 கிடைத்துள்ளது. குன்னுார் தேயிலை ஏல மையத்தை விட டீசர்வ் ஏலத்தில், 9.73 ரூபாய் குறைவாகவே கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ