உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 125 ஆண்டுகள் பழமையான பாலம்; பராமரிப்பு பணி தொடர்ந்தால் பலன்

125 ஆண்டுகள் பழமையான பாலம்; பராமரிப்பு பணி தொடர்ந்தால் பலன்

கூடலுார்;'கூடலுார் ஓவேலி ஆற்றின் குறுக்கே, 125 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட சுண்ணாம்பு பாலம் இன்னும் பல நுாற்றாண்டுகள் பயன்படுத்தும் வகையில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், சாலைகள் மற்றும் ஆறுகளின் குறுக்கே பாலங்கள் அமைத்து போக்குவரத்து மேம்படுத்தியதில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்கள் அமைத்த சாலைகள் இன்றும் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளன. அதில், ஆற்றை கடந்து செல்ல அவர்கள் அமைத்த பாலங்கள் பல இன்றும், பெரிய அளவில் சேதாரம் இன்றி போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது. அதில், கூடலுாரில் இருந்து, ஓவேலி ஆறுட்டுபாறைக்கு செல்லும் சாலையில் உள்ள சுண்ணாம்பு பாலம், 1899ல், 17 ஆயிரம் ரூபாய் செலவில், அமைக்கப்பட்டது. 125 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை இன்றும் வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் அகலம் ஒரு பஸ் மட்டும் செல்லக்கூடிய அளவில் உள்ளது. இந்த பாலத்தில் பஸ், லாரி இயக்குவது சவாலாகவே இருக்கும். எனினும், நுாற்றாண்டுகள் கடந்தும் இதன் உறுதி அப்பகுதி மக்களையும் ஓட்டுனர்களையும் வியப்படைய செய்துள்ளது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இன்று பல்வேறு பகுதிகளிலும் சீரமைக்கப்படும் சாலை புதிதாக கட்டப்படும் பாலங்கள், உறுதி என்பது எத்தனை ஆண்டுகள் என்று கூற முடியாத நிலை உள்ளது. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள். நூற்றாண்டுகளையும் கடந்து உறுதியாக இருப்பதற்கு, இந்த பாலம் உதாரணமாக உள்ளது.பழமையான இந்த பாலத்தை இப்பகுதியில் நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும். அதனை தொடர்ந்து பராமரித்து வந்தால், இன்னும் பல நுாற்றாண்டுக்கு இந்த பாலம் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ