ஊட்டி;ஊட்டி படகு இல்ல படகு ஓட்டுனர்கள், ேகாரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊட்டியில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு, மோட்டார் படகு மற்றும் துடுப்பு படகு ஓட்டுனர்கள், 50க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர்.இவர்கள், பணி நிரந்தரம் உட்பட, அடிப்படை தேவைகள் இல்லாமல், மழை காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.படகு ஓட்டுபவர்களுக்கு, படகு இல்ல நிர்வாகம், ஒரு படகை இயக்கினால், 80 முதல் 85 ரூபாய் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாக, கூறப்படுகிறது. இந்நிலையில், ஊதியம் குறைவாக இருப்பதாகவும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நிலையில் எவ்விதமான வசதிகளும் செய்து தரவில்லை. ேமலும், 'காலையில் பணிக்கு வரும் போதும், மாலையில் பணிமுடித்து ெசல்லும் போதும், படகு இல்ல நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும்,' என, மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறி, 50க்கும் மேற்பட்டோர் படகுகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ேபாராட்டத்தால், சவாரி செய்ய டிக்கெட் வாங்கிய சுற்றுலா பயணிகளுக்கு, அந்த தொகை திருப்பி தரப்பட்டது. அதன்பின், அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின், படகுகள் இயக்கப்பட்டன.