உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூடலுார்;கூடலுார், முதுமலையில் தொடரும் கன மழையால் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கூடலுார் தேவர்சோலை சாலை, பாட்டந்துறை பகுதியில் நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு மரம் விழுந்து, தமிழக- கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். முதுமலை தொரப்பள்ளி ஆற்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட மழை வெள்ளம், இருவயல் குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததால் மக்கள் கடும் சருமத்திற்கு ஆளாகினர்.மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மாக்கமூலா சங்கிலிகேட் பகுதியில், நேற்று காலை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதுமலை, மாயாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தெப்பக்காடு - மசினகுடி இடையே வாகனங்கள் சென்றுவர பயன்படுத்தப்படும் தற்காலிக சாலையில் உள்ள தரைப்பாலம், மூழ்கியது. இதனால், காலை, 7:00 மணி முதல் 11:30 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது ஓட்டுனர்கள் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மார்த்தோமா நகர், வீட்டு வசதி வாரியம் நடைபாதையை ஒட்டி இருந்த மரம் விழுந்து மின்கம்பி மற்றும் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. அதனை சீரமைக்கும் பணியில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ