உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மர்மமான முறையில் செந்நாய்கள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

மர்மமான முறையில் செந்நாய்கள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

கூடலுார் : முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகம், ஆனைகட்டி அருகே, வனப்பகுதியில், நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் இரண்டு செந்நாய்கள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், சீகூர் வனச்சரகர் தயானந்தன் உடல்களை நேற்று, ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மாயாறு அரசு கால்நடை டாக்டர் இந்துஜா ஆகியோர் அதன் உடல்களை பிரேத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த இரண்டு பெண் செந்நாய்களுக்கு, 4 வயது இருக்கும். உயிரிழந்தற்கான காரணம் தெரியாத நிலையில், ஆய்வக பரிசோதனைக்காக, உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் கிடைத்த பின், உயிரிழந்தற்கான காரணம் தெரிய வரும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JeevaKiran
ஆக 29, 2024 12:16

இதுபோன்ற சம்பவங்களில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று வெளியிடுவார்களா? எல்லாம் ஒரு கண்துடைப்புதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை