மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
9 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
9 hour(s) ago
கூடலுார் : முதுமலை, மசினகுடி சிங்கார ஆணிக்கல் கோவில் பகுதியில் ஏற்பட்டுள்ள, வனத்தீயை கட்டுப்படுத்த வன ஊழியர்கள் மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கோடை மழை ஏமாற்றியதால், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே, கல்ஸ்கொம்பை வனப்பகுதியில் வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். வெப்பத்தின் தாக்கம், காற்றின் வேகம் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறைக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால், வனச்சரகர்கள் ஜான் பீட்டர், தயாநந்தன் மற்றும் வன ஊழியர்கள் எதிர் தீ வாயிலாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் கடந்த மூன்றாம் நாளாக போராடி வருகின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago