உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலை வளைவு நகர முடியாமல் நின்ற லாரி

தேசிய நெடுஞ்சாலை வளைவு நகர முடியாமல் நின்ற லாரி

கூடலுார்:கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், கொண்டை ஊசி வளைவில், லாநகர முடியாமல் நின்றதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, வார இறுதி நாள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக, ஏராளமான கேரளா, கர்நாடக சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு, 9:00 மணிக்கு சில்வர் கிளவுட் அருகே உள்ள, கொண்டை ஊசி வளைவை கடக்க முயன்ற கன்டெய்னர் லாரியின், பின்பகுதி சாலையில் உரசி, தொடர்ந்து இயக்க முடியாமல் நின்றுவிட்டது. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் இரவில் சிரமத்துக்கு ஆளாகினர்.கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமித் தலைமையில், போலீசார் ஓட்டுனர்கள் உதவியுடன், போராடி இரவு, 11:00 மணிக்கு, லாரியை அங்கிருந்து மாற்றி போக்குவரத்து சீரானது.பயணிகள் கூறுகையில்,' வார இறுதி நாட்களில் பகல் நேரங்களில் இதுபோன்ற கனரக லாரிகளை முக்கிய சாலையில் செல்ல அனுமதி வழங்க கூடாது. இரவு, 10:00 மணிக்கு அனுமதி வழங்கினால் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க முடியும். போலீசார் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி