உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டின் மீது இடிந்து விழுந்த தடுப்பு சுவர்

வீட்டின் மீது இடிந்து விழுந்த தடுப்பு சுவர்

பந்தலுார்;பந்தலுார் அருகே வீட்டின் மீது தடுப்பு சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதில், தொண்டியாலம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தடுப்பு சுவர் இடிந்து குடியிருப்பு மீது விழுந்துள்ளது. இதனால், குடியிருந்தவர்கள் வீட்டை காலி செய்துள்ளனர். தொடர்ந்து, மழை பெய்தால் இதன் அருகே உள்ள மேலும் சில தடுப்புகள் இடியும் நிலையில் உள்ளதால், நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து இடிந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டும். சேதமடையும் நிலையில் உள்ள சுவர்களை ஆய்வு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ