மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
20 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
20 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
20 hour(s) ago
கூடலுார் : கூடலுார் ஓவேலி அருகே, காட்டு யானை துரத்தியதில் ஓடி விழுந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.கூடலுார் ஓவேலி சுபாஷ் நகரை சேர்ந்தவர் கிரிஜா, 59. இவர், நேற்று முன்தினம், மாலை, 6:30 மணிக்கு, கல்லுாரி சென்று விட்டு வரும் பேத்தியை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக, எல்லமலை சாலை நோக்கி நடந்து வந்தார்.அப்போது, திடீரென எதிரே வந்த காட்டு யானை அவரை நோக்கி வந்தது. அதனிடம் தப்புவதற்காக ஓடியவர் கீழே விழுந்தார். சப்தம் கேட்டு அப்பகுதியினர் யானையை விரட்டி அவரை காப்பாற்றினர்.கீழே விழுந்ததில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். தகவல் அறிந்த வானவர் சுபேத், வன ஊழியர்கள் அவரை மீட்டு சிக்கிக்கையாக, கூடலுார் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago