உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தங்கும் விடுதி ரசீதில் இ-பாஸ் கட்டாயம் ;வாசகம் இடம் பெறுவது அவசியம்

தங்கும் விடுதி ரசீதில் இ-பாஸ் கட்டாயம் ;வாசகம் இடம் பெறுவது அவசியம்

ஊட்டி;'நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் ரசீதில், 'இ-பாஸ் கட்டாயம்' என்ற வாசகத்தை இடம்பெற செய்ய வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 'நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், 'இ-பாஸ்' பெற வேண்டும்,' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த, 7ம் தேதி முதல், இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.மாவட்டத்தில் உள்ள அந்தந்த சோதனை சாவடிகளில், மிக எளிமையாக இ-பாஸ் பெறுவதற்கு ஏதுவாக, தேவையான பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அதே போல், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பயணிகள் தாங்கள் வழங்கும் அறைக்கான முன்பதிவு, ரசீதில் 'இ-பாஸ் கட்டாயம்' என்ற வாசகத்தை அவசியம் இடம் பெற செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ