மேலும் செய்திகள்
அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்: ஆறு பேர் கைது
17-Feb-2025
கூடலுார், ; கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்களை, கூடலுார் போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, ஊட்டிக்கு அரசு பஸ்சில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது உத்தரவுபடி, எஸ்.எஸ்.ஜ., விஜயன் மற்றும் போலீசார் புதிய பஸ் ஸ்டாண்டில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கர்நாடகா அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட, 20 பண்டல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சூலுாரை சேர்ந்த சார்லஸ்,51, என்பவரை கைது செய்தனர். இதன், மதிப்பு, 4,400 ரூபாய் ஆகும். விசாரணையில், இவர் பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு, புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
17-Feb-2025