மேலும் செய்திகள்
பைக்காரா ஏரியில் சவாரி சுற்றுலா பயணியர் 'குஷி'
16-Feb-2025
ஊட்டி,; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு திரளான சுற்றுலா பயணியர் வந்திருந்தனர். ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கர்நாடகா, கேரளா சுற்றுலா பயணியர் வருகை தருகின்றன. தற்போது, சி.பி.எஸ்.இ., தேர்வு துவங்கி நடந்து வருகிறது. விரைவில் பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக குறைந்துள்ளது. எனினும், வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணியர் கூட்டம் சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பிரதான புல்தரை மைதானம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு, திறக்கப்படாமல் இருப்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணியர் ஆடிப்பாடி மகிழ முடியாமல் திரும்புகின்றனர்.
16-Feb-2025