உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்: சேரிங்கிராஸ் பகுதியில் டிராபிக் ஜாம்

வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்: சேரிங்கிராஸ் பகுதியில் டிராபிக் ஜாம்

ஊட்டி;ஊட்டி சேரிங்கிராஸ் உட்பட, நகர சாலையில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமவெளி பகுதியில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக, சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படை எடுக்க துவங்கியுள்ளனர். கோத்தகிரி மற்றும் குன்னுார் பகுதியில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா உட்பட உள்ளூர் வாகனங்கள் நுழையும் சேரிங்கிராஸ் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனை தவிர்க்க, சேரிங்கிராஸ் காந்தி சிலை அருகே, ஒருவழி சாலையில் வாகனங்கள் செல்ல 'பேரிகார்டு' அமைத்து, சாலை மறிக்கப்பட்டுள்ளது.இதனால், அவசர மருத்துவ சேவைக்காக சென்றுவரும் ஆம்புலன்ஸ், இடையூறு இல்லாமல் சென்றுவர, ஏதுவாக, பேரி கார்டை அவ்வப்போது அகற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்