மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
5 hour(s) ago
ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்
5 hour(s) ago
பந்தலுாரில் பறக்கும் நீலப்புலி வண்ணத்து பூச்சிகள்
5 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள, பென்னை பழங்குடியின கிராமத்தில், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் தேசிய பழங்குடியினர் தின நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் வரவேற்றார்.பழங்குடியின மக்கள் இயற்கையை வணங்கும் விதமாக, தங்கள் குலதெய்வத்துக்கு வெற்றிலை பாக்கு மற்றும் தண்ணீர் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் அதனை ஒட்டி தயார்படுத்தப்பட்டிருந்த, நிலத்தில் ராகி விதைத்தனர்.தொடர்ந்து, ஊர்வலமாக வந்த பின்னர், பழங்குடியினர் சங்கத்தின் கொடி ஏற்றும் விழா நடந்தது. மூத்தவர்களான, மாரி, செலும்பி, அம்மிணி ஆகியோர் சங்க கொடியினை ஏற்றினர். பீனா பெயர் பலகையை திறந்து வைத்தார்.சங்கத்தின் தமிழக மூத்த தலைவர் குணசேகரன் தலைமை வகித்து பேசுகையில், ''பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்க வேண்டுமெனில் பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, பழங்குடியின மக்கள், 'வனம் எங்களுக்கே சொந்தம்; வனங்களின் அழிவை தடுப்போம்; வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாப்போம்,' என, உறுதிமொழி எடுத்தனர்.தொடர்ந்து, சங்க வக்கீல் செவ்விளம்பரிதி, இ.கம்யூ., நிர்வாகி முகமதுகனி மற்றும் உட்பட பலர் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago