மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார் : பந்தலுார், நெல்லியாளம் நகராட்சியில் நேற்று தலைவர் சிவகாமி தலைமையில், கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து கவுன்சிலர்கள் வெளியே வந்த போது, நகராட்சியின், 11-வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆலன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒப்பந்ததாரர் சக்கீர் மற்றும் அபுதாகீர் ஆகியோர், 'ஒப்பந்ததாரர் ராயினுக்கு எதிராக, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு நீங்கள் யார்,' என்று கேட்டு தாக்கியுள்ளனர். கீழே விழுந்த கவுன்சிலரை, தலைவரின் உதவியாளர் சைபுல்லா துாக்கி உள்ளார். அவரையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த இருவரும் பந்தலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
18 hour(s) ago
03-Oct-2025