உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மதுவில் தண்ணீர் கலந்து விற்ற இரண்டு சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் டாஸ்மாக் பறக்கும்படை அதிரடி

மதுவில் தண்ணீர் கலந்து விற்ற இரண்டு சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் டாஸ்மாக் பறக்கும்படை அதிரடி

ஊட்டி;ஊட்டியில், மதுவில் தண்ணீர் கலந்து விற்ற இரண்டு சூப்பர்வைசர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.நீலகிரியில், 73 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. தினசரி, 1.70 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. இந்நிலையில், ஊட்டி மார்க்கெட் ரவுண்டானா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களில் தண்ணீரில் போதை வஸ்துக்களை கலந்து விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய டாஸ்மாக் அதிகாரிகள், மது விலக்கு போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால், டாஸ்மாக் சென்னை தலைமைக்கு புகார் சென்றது. கடந்த, 6ம் தேதி சென்னையிலிருந்து டாஸ்மாக் பறக்கும்படையினர் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மதுபாட்டில்களில் தண்ணீரில் போதை வஸ்துக்களை கலந்து விற்பனை செய்ததை உறுதிப்படுத்தினர்.டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் கூறுகையில், '' ஊட்டி டாஸ்மாக் மதுக்கடையில் டாஸ்மாக் பறக்கும்படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மதுபாட்டிலில் தண்ணீரில் போதை வஸ்துக்களை கலந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அந்த டாஸ்மாக் மதுக்கடையின் சூப்பர்வைசர்கள் உமேஷ், சதீஷ் இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ