உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாழ்வாதாரம் உயராத உலிக்கல் பேரூராட்சி; ஊராட்சியாக மாற்றாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

வாழ்வாதாரம் உயராத உலிக்கல் பேரூராட்சி; ஊராட்சியாக மாற்றாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

குன்னுார் : 'உலிக்கல் பேரூராட்சியாக மாற்றப்பட்ட போதும் மக்களின் வாழ்க்கை தரம் உயராததால், மீண்டும் ஊராட்சியாக மாற்ற வேண்டும்,' என, உள்ளாட்சி மீட்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகள் மீட்பு மக்கள் இயக்க விழிப்புணர்வு கூட்டம் உலிக்கல் கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, ஊர் தலைவர் சேதுராமன்தலைமை வகித்தார். உள்ளாட்சி மீட்பு இயக்க பிரதிநிதி சுப்ரமணியன் பேசுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் முதல் பேரூராட்சியான உலிக்கல் பேரூராட்சியில் பழங்குடியின கிராமங்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. ஒரே ஒரு கடைவீதியாக சேலாஸ் பகுதி மட்டுமே உள்ளது. 12 ஆயிரத்து 960 பேர் கொண்ட உலிக்கல் பகுதி, பேரூராட்சியாக மாற்றப்பட்ட போதும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இங்குள்ள 'கார்ப்பரேட்' நிறுவனங்களின் தேயிலை தோட்டங்களின் வருவாயின் அடிப்படையை வைத்து நிலை உயர்த்தப்பட்ட இந்த பேரூராட்சியில் அதிக வரியை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் செலுத்தி வரும் அவலம் நீடிக்கிறது,''என்றார்உள்ளாட்சி அமைப்புக் குழு இயக்க பிரதிநிதிகள் சிலர் பேசுகையில், 'இங்குள்ள, 18 வார்டுகளிலும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மத்திய அரசின் கிராமங்களுக்கு செல்லும் திட்டங்கள் பேரூராட்சி என்பதால் பழங்குடியினருக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் உரிய முறையில் கிடைப்பதில்லை. ஊராட்சியாக மாற்ற தீர்மானம் நிறைவேற்ற வார்டு கவுன்சிலர்கள் முன் வர வேண்டும். இதற்காக கையெழுத்து இயக்கம் மற்றும் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,' என்றனர். கூட்டத்தில் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை