உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதாள சாக்கடை பணி தோல்வி; வெள்ளத்தில் நடமாடும் பயணிகள்

குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதாள சாக்கடை பணி தோல்வி; வெள்ளத்தில் நடமாடும் பயணிகள்

குன்னுார்; குன்னுாரில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் நிலையில், ஆங்கிலேயர் கால, பாதாள கால்வாய்களை சீரமைக்காததால், பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்கி, பயணிகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகள், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேற்கொள்ளாமல், பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள விடுதிகள் சீரமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.பஸ் ஸ்டாண்டின் எதிர்புறம் ஆற்றோர பகுதியில் 'ஜிங்க் சீட்' கொண்டு தடுப்பு அமைத்து இருக்கைகள் வைக்கப்பட்டன. எனினும் பஸ் ஸ்டாண்டிற்குள் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், தற்போது, அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், உழவர் சந்தை டிசான்ஜரி சாலையில், ஆங்கிலேயர் காலத்து கல்வெட்டு சீரமைக்காமல் உள்ளதால் மழை நீர் சாலையில் ஓடி பஸ் ஸ்டாண்டில் வந்து தேங்குகிறது. பள்ளி மாணவ, மாணவிகள், மழை வெள்ளத்தில் நடந்து, ஷூக்கள் நனைந்து, குளிரில் சிரமப்படுகின்றனர். பயணிகள் கூறுகையில், 'புதிதாக அமைக்கப்பட்ட ஜிங்க் சீட் தடுப்புடன், மண்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை