| ADDED : ஏப் 12, 2024 10:40 PM
நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில், பா.ஜ., வேட்பாளர் முருகனை ஆதரித்து நடிகை நமீதா பேசினார்.தனக்கே உரித்தான 'பாணி' யில் அவர் பேசியதாவது:இப்போ ஒரு எம்.பி.க்கு 'வோட்' போட்ருக்கீங்க; அவரு பேரு சொல்ல நான் விரும்பல; எனக்கு 'இண்ட்ரஸ்ட்' இல்ல. அவரு நம்ப கலாசாரத்தை, நம்ப மண், நம்ப மதத்தையும், நம்மளையும் அசிங்கமா பேசறாங்க. அவமானப்படுத்தறாங்க. இந்த மாதிரி ஒரு ஆளுக்கு 'வோட்' போடப் போறீங்களா; நம்ம முருகன்ஜிக்கு 'வோட்' போடப் போறீங்களா. முருகன், நல்லா படிச்சவரு; உங்க கஷ்டத்தை நல்லா புரிஞ்சவரு. உங்களுக்காக ஒருவர்; உங்களில் ஒருவர். சட்டம் படிச்சவரு. ஏழை மக்களுக்கு நெறைய உதவி செஞ்சிருக்காரு. தைரியாம, நம்பி தாமரைக்கு 'வோட்' போடுங்க. ஒங்களுக்கு எப்போதும், எல்லாம், 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு இருப்பாரு; ஏன்னா, தாமரை மலரும்... தமிழ்நாடு வளரும்.பத்து வருஷம் முன்னாடி வரைக்கும் 'வோட்டிங்' பண்ணி என்ன ஆகப்போற; எதுவும் 'பெனிபிட்' இல்ல; எனக்கு வசதி இல்ல. யாரும் ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொல்லி யாரும் 'வோட்டிங்' பண்ணல. நம்ம எல்லாம், கண்டிப்பா 'வோட்' பண்ணணும்; நம்ம குழந்தைங்க வளர்ச்சிக்காக, நம்ம 'பேமிலி'க்காக 'வோட்' போடணும்.ஒரு சிம்பிள் கேள்வி கேக்கப்போறேன். உங்க எல்லார் கைலும் என்ன இருக்கு; ஸ்மார்ட் போன் இருக்கா; பத்து வருஷம் முன்னாடி இருந்துச்சா. 'வைப்' பத்தி எல்லாத்துக்கும் தெரியும்; ஆனா, 'வை-பை' பத்தி யாருக்கும் தெர்ல. இப்பெல்லாம், ஜி பே, பேடிஎம்., எல்லாம் வந்துடுச்சு; ஒரு செகண்டல காசு அனுப்பலாம். அதனால சொல்றேன்... நம்ம முருகன்ஜிக்கு 'வோட்' செய்ங்க... இவ்வாறு, நமீதா பேசினார். அவரது பேச்சை கேட்ட பொதுமக்கள் அடிக்கடி கைதட்டியும், விசில் அடித்தும் அவரை உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தனர்.