| ADDED : ஏப் 10, 2024 11:33 PM
ஊட்டி : ஊட்டியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 'வி.வி.பேட்' இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணியினை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.நீலகிரி லோக்சபா தொகுதியில், அரசியல் கட்சிகள் உட்பட, 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கூடுதலாக, 240 ஓட்டுப்பதிவு கருவிகள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து கொண்டுவரப்பட்டு, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் அலுவலத்தில் உள்ள ஓட்டுப்பதிவு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பவானிசாகர், அவிநாசி, மேட்டுப்பாளையம், குன்னுார், ஊட்டி மற்றும் கூடலுார் ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள,1,619 ஓட்டு சாவடி மையங்களுக்கு பயன்படுத்தும், 7,942 மின்னணு ஓட்டுப்பதிவு கருவிகள் மற்றும் வி.வி.பேட் ஆகியவை, இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள்நடந்தது.இப்பணியை, தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித்சிங் பரார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டனர்.