உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண்ணை கொன்று சாப்பிட்டது புலியா, சிறுத்தையா?

பெண்ணை கொன்று சாப்பிட்டது புலியா, சிறுத்தையா?

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள பேரார் பொம்மன் நகரை சேர்ந்த கோபால் மனைவி அஞ்சலை, 50, நேற்று முன்தினம் தேயிலை பறிக்க காலிபெட்டா பகுதிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு வரை குடும்பத்தினர், உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை அரக்காடு அருகே உள்ள காலிபெட்டா தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது, பெண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது.ஊட்டி வடக்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்ததில், இறந்தவர் அஞ்சலை என, தெரியவந்தது. அவரை விலங்கு கொன்று, உடல் பாகங்களை சாப்பிட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், ''அஞ்சலையை தாக்கிய விலங்கு புலியா, சிறுத்தையா என்பது குறித்து கால் தடங்களை ஆய்வு செய்து வருகிறோம். அப்பகுதியில், 10 நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ''கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள், ஞாயிறு வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி