உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மார்லி மந்து அணையில் 20 அடிக்கு நீர் மட்டம் உயர்வு

மார்லி மந்து அணையில் 20 அடிக்கு நீர் மட்டம் உயர்வு

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக உள்ள மார்லி மந்து அணையில், 20 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.நீலகிரியில் தென் மேற்கு பவரு மழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்தது. ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி அணை, மார்லி மந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் உட்பட, 10 அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அதேபோல், கோடப்பமந்து அப்பர், தொட்டபெட்டா லோயர், கிளன்ராக் அணைகளிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.

நீர் மட்டம் உயர்வு

அதில், 55 அடி உயரம் கொண்ட ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 45 அடியாகவும்; 23 அடி கொள்ளளவு கொண்ட மார்லிமந்து அணையின் நீர்மட்டம், 20 அடி வரை உயர்ந்துள்ளது. 31 அடி உயரம் கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணையின் நீர்மட்டம், 25 அடியாகவும் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக, மார்லிமந்து அணை நீர் ஊட்டி நகராட்சியில், 8 வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியதால் வார்டு மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ