மேலும் செய்திகள்
இரு வேறு பகுதிகள்: விபத்தில் சிக்கிய கார்கள்
11-Feb-2025
பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் ஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 37, அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி விமலா ராணி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே நின்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, தன் கணவன் முரளி மீது, திடீரென பெயின்டில் கலக்கப்படும் தின்னர் என்ற திரவத்தை ஊற்றி, மனைவி விமலா ராணி தீ வைத்தார். பலத்த காயங்களுடன் துடித்த அவரை, அருகில் இருந்தவர்கள், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு முரளி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.உயிரிழப்பதற்கு முன், தன் மனைவியின் நடவடிக்கை மற்றும் தன் மீது தின்னரை ஊற்றி தீ வைத்தது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, தேவாலா போலீசார், விமலா ராணியிடம் விசாரித்து வருகின்றனர்.
11-Feb-2025