உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கணவனை தீ வைத்து கொன்ற மனைவி- கைது பரிதவிக்கும் மூன்று பெண் குழந்தைகள்

கணவனை தீ வைத்து கொன்ற மனைவி- கைது பரிதவிக்கும் மூன்று பெண் குழந்தைகள்

பந்தலூர்:பந்தலுார் அருகே கணவனை 'தின்னர்' திரவம் ஊற்றி எரித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், பந்தலுார்ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி,37. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விமலாராணி,28, அடிக்கடி மொபைல் போனில் பேசி கொண்டிருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை விமலாராணி, கணவன் முரளியின் கண்களில் பெவிகோல்; உடலில் 'தின்னர்' திரவத்தை ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளார். பலத்த காயங்களுடன் துடித்த அவரை, அருகில் இருந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன், 'தனது மனைவியின் நடவடிக்கை மற்றும் தன் மீது தீ வைத்தது,' குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக, கூடலுார் டி.எஸ்.பி., ஜெயபால், இன்ஸ்பெக்டர் துரைபாண்டி ஆகியோர் விமலாராணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, 'கணவனின் கண்களில் பெவிகோல், உடலில் 'தின்னர்' திரவத்தை ஊற்றி, தீ வைத்து எரித்து கொலை செய்தேன்,' என, ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு விமலாராணி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு, 8 வயது, 5 வயது, 2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ