உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை: அச்சத்தில் மக்கள்

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை: அச்சத்தில் மக்கள்

கூடலுார் : மசினகுடி வாழை தோட்டம் பகுதியில், அதிகாலையில் நுழைந்த காட்டு யானை, மளிகை கடையை சேதப்படுத்தி சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மசினகுடி வாழை தோட்டம் பகுதியில் மோகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றார். நேற்று, அதிகாலை, 3:30 மணிக்கு அப்பகுதியில் நுழைந்த மக்னா யானை, பூட்டிய கடையின் சட்டரை சேதப்படுத்தி அதிலிருந்த மளிகை பொருட்களை வெளியே எடுத்து வீசியதுடன், அரிசியை உட் கொண்டது. வனத்துறைக்கு மக்கள்த கவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள அப்பகுதிக்கு வந்து, யானையை விரட்டினர். இச்சம்பத்தால், அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'இந்த யானை ஏற்கனவே சில வீடுகளை இடித்து அரிசியை உட்கொண்டு சென்றுள்ளது. சிறிது காலம் இடைவெளிக்கு பின், மீண்டும், இப்பகுதிக்குள் நுழைந்த கட்டு யானை கடையை உடைத்து அரிசியை உட்கொண்டது. யானை அரிசிக்காக வீடுகளை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ