உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை அஞ்சுகுன்னு, குச்சிமுச்சி சுற்று வட்டார பகுதிகளில், காட்டு யானைகள் இரவில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு காண மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, வனத்துறையினர் முதுமலை 'கும்கி' யானைகள் உதவியுடன், காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தேவர்சோலை பாடந்துறை அருகே உள்ள, மச்சிகொல்லி பகுதியில், நேற்று அதிகாலை, 35 வயதான ஆண் காட்டு யானை வந்தது. அங்குள்ள பாக்கு மரத்தை அந்த யானை, கீழே தள்ளி உள்ளது. பாக்கு மரம் மச்சிகொல்லி சாலை வழியாக செல்லும் மின் கம்பி மீது விழுந்தது. அப்பகுதிக்கு சென்ற காட்டு யானை மின் கம்பியில் சிக்கி, 'ஷாக்' அடித்து இறந்தது.கூடலுார் வனத்துறையினர் யானையின் உடலை ஆய்வு செய்தனர். இறந்த யானைக்கு, 35 வயது இருக்கும். யானை சாய்த்த பாக்கு மரம் மின்கம்பி மீது விழுந்தது. அந்த மின் கம்பியில் சிக்கி காட்டு யானை 'ஷாக்' அடித்து உயிரிழந்தது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ