உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜீன்பூல் தாவர மையத்தில் வனத்தீ ; பல ஏக்கர் பரப்பிலான புல்வெளி சேதம்

ஜீன்பூல் தாவர மையத்தில் வனத்தீ ; பல ஏக்கர் பரப்பிலான புல்வெளி சேதம்

கூடலுார்;கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் ஏற்பட்ட வனத்தீயில், 25 ஏக்கர் பரப்பிலான புல்வெளிகள் எரிந்து சேதமானது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் நடப்பு ஆண்டு ஜன., முதல், அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு தொடர்கிறது. கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. இதனால் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று, மாலை நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் திடீரென வனத்தீ ஏற்பட்டது. வனச்சரகர் வீரமணி மற்றும் வன ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ வேகமாக பரவியது. கூடலுார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், வனத்துறையுடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.எனினும், வனத்தீயில், 25 ஏக்கர் பரப்பிலான புல்வெளிகள் எரிந்து சேதமானது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,' அப்பகுதியில் வன ஊழியர்களின் கண்காணிப்பு பணி தொடர்கிறது. வனத்துக்கு தீ வைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்