பந்தலுாரில் அ.தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா
பந்தலுார்; பந்தலுார் பகுதியில், அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மகளிர் தின விழா நடத்தப்பட்டது. மகளிர் அணி நகர பொருளாளர் சாந்தா கருப்பசாமி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே துவங்கிய ஊர்வலத்தை மாவட்ட செயலாளர் வினோத், எம்.எல்.ஏ., ஜெயசீலன் ஆகியோர் துவக்கி வைத்து, 800 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மிக்சி, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மகளிர் அணி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில், மூதாட்டிகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து, நகரச் செயலாளர் ராஜா, அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ராமானுஜம் ஆகியோர் மகளிரின் முக்கியத்துவம் குறித்து பேசினர். வக்கீல் கலைமணி நன்றி கூறினார்.