| ADDED : ஆக 20, 2024 02:01 AM
குன்னூர்;கோத்தகிரியில் மின்கம்பி உரசி அரசு பஸ் டிரைவர் உயிரிழந்த நிலையில், குன்னுாரில் அபாயகரமான மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் சீரமைக்கும் பணி நடந்தது.கோத்தகிரி அருகே மின்கம்பி உரசி சென்ற அரசு பஸ் டிரைவர் பிரதாப் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் நீலகிரியில் சாலை ஓரங்களில் அபாயகரமாக உள்ள மின் கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் மீது சாய்ந்துள்ள மரங்கள், அடர்ந்த செடி கொடிகள் அகற்ற அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், ஆர்.டி.ஓ., சதீஷ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், அபாயகரமான மின் கம்பங்கள், மின் கம்பிகள் சீரமைத்தனர். மேலும், மின் கம்பங்கள், கம்பிகள் அருகே உள்ள மர கிளைகள், செடி புதர்கள் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.