மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டியில் மழை ஓய்ந்த நிலையில், ரோஜா பூங்காவில் நாற்றுகளுக்கு உரமிட்டு பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தப்படியாக ரோஜா பூங்காவின் அழகை, சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். பூங்காவில், 5.000 ரகங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.நடப்பாண்டு, மே, 10ம் தேதி 19வது ரோஜா கண்காட்சி துவங்கி நிறைவடைந்தது. இ-பாஸ் நடைமுறை இருந்தும், கொட்டிய மழையிலும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதுவரை, ஒரு லட்சத்து, 5,649 சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை ரசித்து சென்றுள்ளனர்.கடந்த, மூன்று நாட்களாக வெயிலான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில், மழையின் போது பாதித்த ரோஜா மலர்கள் செடிகளை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. தற்போது, மொட்டுக்கள் விரியும் நிலையில் உள்ள ரோஜா செடிகளை பராமரிக்க ஏதுவாக, பாத்திகள் கட்டி, உரமிடும் பணியில், பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
03-Oct-2025