உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண் சரிவை சீரமைத்த இளைஞர்கள்

மண் சரிவை சீரமைத்த இளைஞர்கள்

கூடலுார்;கூடலுார் தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம், முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதில், சில இடங்களில் சாலையில் மண் சரி ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மட்டம் - புழம்பட்டி சாலையில் நேற்று காலை மண் சரி ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவர்சோலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் யுனுஸ்பாபு மற்றும் மட்டம் விளையாட்டுக் குழு இளைஞர்கள் மண் சரிவை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். அரசு துறையினர் வரும் வரை காத்திருக்காமல், இளைஞர்கள் மேற்கொண்ட பணியை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை