| ADDED : ஜூன் 04, 2024 12:06 AM
குன்னுார்;குன்னுார் அணியாடா பகுதியில் பெண்களை ஆபாசமாக 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.குன்னுார் அருகே அணியாடா பகுதியை சேர்ந்த அஜித்குமார்,23. கட்டட பணியாளர். இவர் சில பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மக்கள் அவரை பிடித்து, வெலிங்டன் போலீசில் ஒப்படைத்தனர். எனினும், நடவடிக்கை எடுக்காமல், 'மகளிர் போலீஸ் ஸ்டேஷன்; ஊட்டி சைபர் கிரைம்,' என, மூன்று நாட்களாக மக்கள் அலைகழிக்கப்பட்டனர். அதன்பின் வந்த, எஸ்.பி., அலுவலக உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., குமார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. தொடர்ந்து,வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி அஜித்குமாரை கைது செய்தனர்.