உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.11.78 லட்சம் பறிமுதல்

ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.11.78 லட்சம் பறிமுதல்

கூடலுார்;கூடலுார் பகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற, 11.78 லட்சம் ரூபாயை ஏழு பேரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தமிழகம், கர்நாடகா, கேரளா எல்லையான, கூடலுார் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், தொடர் வாகன சோதனை மேற்கொண்டு, ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம், இரவு தேர்தல் பறக்கும்படை அதிகாரி பூபாலன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ., பாபு கோழிக்கோடு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ரமேஷா என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய், மலப்புரம் அப்துல் ரகுமான் என்பவரிடமிருந்து, 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி லதா மற்றும் எஸ்.எஸ்.ஐ., திருக்கேஸ்வரன் குழுவினர், தொரப்பள்ளி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டு, மலப்புரம் முகஷீர் என்பவரிடமிருந்து, 2.29 லட்சம் ரூபாய், சத்தியம் என்பவரிடமிருந்து, 99 ஆயிரம் ரூபாய், அஷ்ரப் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முதுமலை கார்குடி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டு எர்ணாகுளத்தை சேர்ந்த தாமஸ் என்பவரிடமிருந்து, 94 ஆயிரம் ரூபாய்; மாக்கமூலா பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டு, மலப்புரம் ஷாஜி என்பவரிடமிருந்து, 3.95 லட்சம் ரூபாய் என, மொத்தம், 11:78 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட தொகை, கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தொடர்ந்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கூடலுார் பகுதியில் நேற்று வரை மொத்தம், 30.91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்