உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மாவட்டத்தில் 270 அரசு பஸ்களில்... ஜி.பி.எஸ்., கருவி; முறையான இயக்கத்தை கண்டறிய நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் 270 அரசு பஸ்களில்... ஜி.பி.எஸ்., கருவி; முறையான இயக்கத்தை கண்டறிய நடவடிக்கை

ஊட்டி : நீலகிரியில் தொலைதுார அரசு பஸ்கள் மட்டுமின்றி, கிராமப்புற பஸ்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு முறையான இயக்கம் கண்டறியப்பட்டு வருகிறது.மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இயங்கும் அரசு பஸ்களில் பயணியரின் வசதிக்காக பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஜி.பி.எஸ்., கருவி மற்றும் எல்.இ.டி., 'லைட்' பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பஸ்களில் அடுத்த நிறுத்தம் வருவதற்கு, 100 மீ., முன்னதாக, தமிழில் அறிவிப்பு செய்யப்படும்.

மலை பஸ்களில் ஜி.பி.எஸ்

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அரசு போக்குவரத்து கழக மண்டல கட்டுப்பாட்டில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மேட்டுப்பாளையம் கிளை-2 ஆகிய பணிமனைகள் உள்ளன.'இங்கிருந்து கிராமப்புறங்களுக்கு மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற வெளிமாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலம்,' என, 270 வழித்தடத்திற்கு, 335 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள்; உள்ளூர் நகர பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட பகுதிகளுக்கு இயக்கபடுவது குறித்து நிர்வாகம் அறிந்து கொள்ள முடியும். அதில், ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உடனடியாக மாற்றங்களையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்து.அரசு போக்குவரத்து கழக உதவி பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ''ஊட்டியிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் தொலைதுார அரசு பஸ்கள், டவுன் பஸ்களில், கடந்த ஒரு மாத காலமாக, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு அதன் முறையான இயக்கம் கண்டறியப்பட்டு வருகிறது.ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக பஸ்களின் இயக்க வழித்தட இயக்கம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். வரையறுக்கப்பட்ட வழித்தடம் மாறி இயக்கப்படுவதை கண்டறியலாம். அதேபோல், வரையறுக்கப்பட்ட பஸ் ஸ்டாப்புகளில் நின்று செல்வதும் உறுதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில், 270 பஸ்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பஸ்களில் படிப்படியாக பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை