உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிளாஸ்டிக் சோதனையில் 30 கிலோ பறிமுதல்

பிளாஸ்டிக் சோதனையில் 30 கிலோ பறிமுதல்

குன்னுார்; குன்னுார் கடைகளில் நடத்திய திடீர் சோதனையில், 30 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக், குடிநீர் பாட்டில், பேப்பர் கப் உட்பட, பல வகையான பொருட்களுக்கு தடை உள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளும் சோதனையில், பிளாஸ்டிக் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குன்னுார் வருவாய்துறை சார்பில், கூடுதல் கலெக்டர் சங்கீதா தலைமையில், தாசில்தார் ஜவகர் உட்பட வருவாய் துறையினர் மார்க்கெட், மவுன்ட் ரோடு உட்பட சுற்றுப்புற பகுதிகளில், திடீர் சோதனை செய்தனர். இதில், 30 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து கடைக்காரர்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ